சிலப்பதிகார முத்தமிழ் விழா -2019

சிலப்பதிகார முத்தமிழ் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், திருவையாறு தமிழ் ஜயா கல்விக் கழகமும், மற்றும் யாழ்ப்பாணத் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடாத்திய சிலப்பதிகார முத்தமிழ் விழாவானது யாழ்பாணத்தின் நல்லுhரில் உள்ள துரக்காதேவி மண்டபத்தில் மிகவூம் சிறப்பாக நடைபெற்றிருந்தது.

இவ் விழாவின் இறுதிநாளான 19.01.2019, சனிக்கிழமை அன்று “ சிலம்பு கூறும் பதினோர் ஆடல்கள்” எனும் பெயரில் அமைந்த நடன நிகழ்வை சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கை நிறுவகத்தினர் வழங்கியிருந்தனர். நடனத் துறை சிரேஸ்ட விரிவூரையாளரான திருமதி. சர்மிளா ரஞ்சித்குமார் அவர்களின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட இந் நடன ஆற்றுகையில் நடன, நாடக விரிவூரையாளர்கள், மற்றும் மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் மாதவி ஆடிய பதினொரு வகையான ஆடல்களான கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல்லாடல், துடி, குடை, குடம், பேடி, மரக்கால், பாவை, கடையம், போன்ற பதினொரு கூத்து வகைகளை இணைத்ததாக இந்நடன ஆற்றுகை அரங்களிக்கை செய்யப்பட்டிருந்ததோடுஇ அனைவரின் வரவேற்பையூம், பாராட்டுக்களையூம் பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.